×

சிறப்பு குழந்தை மாயம்

 

பெரம்பூர், ஜூலை 24: ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(41), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் யஸ்வந்த்(11) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் திடீரென யஸ்வந்த் வீட்டிலிருந்து வெளியே வந்து வீட்டின் வெளிப்புற கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாழ்பாளை திறந்து வீட்டில் இருந்து வெளியே வந்து யஸ்வந்த்தை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவனின் தந்தை ராஜாராம் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறப்பு குழந்தையை தேடி வருகின்றனர்.

Tags : Perambur ,Rajaram ,Sachidanandam Street, Kosapet, Otteri ,Ambattur ,Yashwanth ,Purasaivakkam… ,
× RELATED ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது