மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது. தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாகளிகள் இருப்பின் அடையாள அட்டை வைத்துள்ளோர் அவர்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Related Stories: