×

சீர்காழி பகுதியில் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து சர்க்கரை துறை ஆணையர் ஆய்வு

 

சீர்காழி,ஜூலை 23: குறுவை தொகுப்பு திட்டம் இயந்திர நடவு பின்னேற்பு மானியம், திரவ உயிர் உர விநியோகம், நுண்ணூட்டக் கலவை விநியோகம் ஆகியவற்றை சர்க்கரை துறை ஆணையர் கண்ணன், சீர்காழி வட்டாரம் செம்பதனிருப்பு மற்றும் கைவிலாஞ்சேரி ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார் மேலும் விவசாயிகளிடம் குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பாக ஏதேனும் தவறு நடைபெறுகிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டார். குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பான விவசாயிகளின் கருத்தினையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் பிரபு, சுகன்யா, தீபன் சக்கரவர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழரசன், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Kuruvai Cluster ,Sirkazhi ,Sugar Commissioner ,Kannan ,Kuruvai ,Sempathaniruppu ,Kaivilancheri ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...