×

செக் மோசடி வழக்கு நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை: சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ. 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார்.

இந்த காசோலையை பைனான்சியர் கோபி வங்கியில் செலுத்திய போது, விமல் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கவே நடிகர் விமல் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி, ஆர்த்தி நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் புகார்தாரரிடம் வாங்கிய தொகையை திரும்பத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் விமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags : Chennai Small Cases Court ,Vimal ,Chennai ,Gopi ,
× RELATED ஜனநாயகன் படம் தீபாவளி, பொங்கல்...