×

டெல்லியில் உள்ள காந்தியடிகள் நினைவிடம் நோக்கி சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

டெல்லி; டெல்லியில் உள்ள காந்தியடிகள் நினைவிடம் நோக்கி சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல் காந்தி வீட்டில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்ற பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற பேருந்தை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காந்தியடிகளின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

காந்தி நினைவிடம் செல்ல முயன்ற தங்களை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். “நமது மாணவர்கள் தெருவில் (போராட்டத்தில்) நிற்கிறார்கள், அதனால் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் நாமும் தெருவில் இறங்கிப் போராட வேண்டும் என்று கருதினோம். அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்தியா கேட் (India Gate) செல்ல விரும்பினோம். ஆனால் அவர்கள் மறுத்து, எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். பின்னர் நாங்கள் காந்தி நினைவிடம் செல்ல விரும்புகிறோம் என்று கூறினோம்.

அவர்கள் பேருந்தை இங்கே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். எங்களால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல முடியவில்லை, ஆனால் இதன் முக்கியச் செய்தி மாணவர்களுக்கானது தான். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்…” என்று கூறினார்.

Tags : Rahul Gandhi ,Gandhi Memorial ,Delhi ,M. ,
× RELATED வகுப்புகள் புறக்கணிப்பு...