×

டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் ஆணை

டெல்லி: டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 18 வரை டெல்லி காவல் ஆணையருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போராடும் இளைஞர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தால் நீதி விசாரணையின்றி ஓராண்டு வரை சிறையில் வைக்கலாம்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கரப்பன்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இந்த நிலையில் 4வது நாளக டெல்லியில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தை நடந்து தோல்வியுற்ற நிலையில், இளைஞர்கள் மீதான தாக்குதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கி துணை நிலை ஆளுநர் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி காவல்துறை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,Deputy Governor ,Taranjit Singh Sandhu ,Delhi Police ,
× RELATED வகுப்புகள் புறக்கணிப்பு...