சீர்காழியில் முதியவரை ஈவு இரக்கமின்றிள் கொடூரமாகத் தாக்கிய தவெக நிர்வாகி: வீடியோ வெளியாகி அதிர்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியப் பகுதியில் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க சீர்காழி ஒன்றியத் துணைச் செயலாளரான ‘ஜில்லா மணி’ என்பவர், முதியவர் ஒருவரைக் காரில் கடத்தி ஈவு இரக்கமின்றித் தாக்கியுள்ளார். மேலும், அந்தத் கொடூரச் செயலைத் தன் கைபேசியில் வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததாகக் கூறப்படும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கண்டனங்களை கிளப்பியுள்ளன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் நிலையில், வயதுக்கோ அல்லது அரசியல் பின்னணிக்கோ அப்பாற்பட்டு, இந்த வன்முறையில் ஈடுபட்ட நபர் மீது மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை வெறுமனே ஏடுகளில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட முதியவருக்கு உடனடியாக நீதி கிடைக்கச் சட்டரீதியான விரைவு நடவடிக்கை தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: