×

தமிழ்நாடு அமைச்சருடன் திருப்பதியில் அனுமதியின்றி நுழைந்தவர் மீது வழக்கு

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்பிரதாய முறைப்படி கணக்கு சமர்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானம் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வந்து சமர்ப்பித்தார். அப்போது அமைச்சருடன் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள் என 10 பேருக்கு முன்கூட்டியே பெயர் பட்டியல் பெற்று புரோட்டோக்கால் தரிசனத்திற்காக கோயில் மகாதுவாரம் (ராஜகோபுரம்) வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதில் திருமலையில் உள்ள ஸ்ரீரங்கம் மடத்தின் மேலாளரான ராஜாரெட்டி எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைச்சருடன் கோயிலுக்குள் சென்றார். இது தொடர்பாக திருமலை போலீசார் ராஜா ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Tirupati ,Tamil Nadu ,Tirumala ,Tirupati Ezhumalaiyan Temple ,Tamil Nadu Hindu Endowments ,Minister ,Ramesh ,Srirangam Ranganathar Temple ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...