- திரிஷா
- அம்மன்
- ஆத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா
- ஆத்தூர்
- அதூர் மாரியம்மன்
- கோவில்
- தேர்த்திருவிழா
- தவேகாஸ்
ஆத்தூர்: ஆத்தூர் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவுக்காக, நடிகை திரிஷாவை அம்மனாக சித்தரித்து தவெகவினர் பிளக்ஸ் பேனர் ைவத்தனர். இது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, உடனடியாக பேனரில் இருந்த திரிஷா படத்தை அகற்றி, அதன் மீது வேறு ஒரு பெண்ணின் படத்தை ஒட்டினர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் மிகப் பழமையான பெரியமாரியம்மன் கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், 4 வருடங்களுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தவெக கட்சியினர் சார்பில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆத்தூர் பயணியர் மாளிகை அருகில், தவெக சார்பில் முதல்வர் விஜய்யின் பிளக்ஸ் பேனரை வைத்துள்ளனர்.
அதில் நடிகை திரிஷாவை, அம்மன் அலங்காரத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், அதற்கு பின்னால் முதல்வர் விஜய் சட்டசபையில் செய்த காட்டிய சர்ச்சை சைகை காட்சியுடனும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. திரிஷாவை அம்மனாக சித்தரித்து, தவெகவினர் வைத்த பேனரால் சர்ச்சை கிளம்பியது. இது பொதுமக்கள் இடையே பேசுபொருளாக மாறியது. இதனால், தவெகவினர் திரிஷா அம்மனாக இருந்த படத்தை அகற்றி விட்டு, வேறு ஒரு புகைப்படத்தை பேனர் மீது ஒட்டி வைத்தனர்.
