நாகர்கோவில்: நாகர்கோவில் சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதித்துள்ளார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்ட அவரின் உடற்கூராய்வு குறித்த வீடியோவை பெற்று குடும்பத்தினர் தரப்பில் ஆய்வு செய்ததில் சந்தேகமும் இல்லை என்பதால் உடலை வாங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
