×

பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு

 

சென்னை: பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் அடங்கிய விசாரணைக் குழு அமைத்து உத்தரவு அளித்துள்ளது. பழனி கோயில் நில முறைகேடு தொடர்பாக பணியில் இருந்த சார்-பதிவாளரிடம் குழு விசாரணை நடத்தும். விடுப்பில் சென்ற சார்-பதிவாளர், உதவியாளர், மாவட்ட பதிவாளரிடம் குழு விசாரணை மேற்கொள்ளும். பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்-பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளையும் குழு ஆய்வு செய்யும் – பதிவுத்துறை

 

Tags : Palani ,Chennai ,Registrar ,
× RELATED விளையாட்டு விடுதியில் இருந்து ஒரே...