ஈரோடு: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.19,150 ஆக அதிகரித்துள்ளது. மஞ்சள் விலை நேற்று குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில் இன்று மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை கடந்த மாதம் குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் ரூ.4500 உயர்ந்துள்ளது. இருப்பு குறைவு, உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
