×

பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு – மம்தா ஆவேசம்

கொல்கத்தா: நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி, 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மம்தாவை வீழ்த்தியது. இந்த தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சி உள் கட்சிப் பிளவு, நாடாளுமன்ற எம்பி-க்கள் விலகல் என கடும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு அரசியல் பதவிகள் முக்கியமல்ல என்றும், பாஜக-வை இந்திய அரசியலில் இருந்தும், டெல்லி அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதே தனது ஒரே இலக்கு என்றும் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அடித்தளத்திலிருந்து மீண்டும் வலிமையாக கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி தலைவர்களை பாஜக அச்சுறுத்துவதாகவும், என்னை முழுமையாக்கி அமைதிப்படுத்த பாஜக நினைப்பதாகவும் குறிப்பிட்டார். அப்படி என்னை அமைதியாக வேண்டுமென்றால் தன்னைக் கொல்லத்தான் வேண்டும் என்றும் மம்தா கூறியுள்ளார். என்னையும், எங்கள் கட்சி தலைவர்களையும் அச்சுறுத்த பாஜக எந்த ஒரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை என்றும் மம்தா குற்றம் சாட்டினார்.

Tags : BJP ,Mamta ,Kolkata ,Former ,Mamta Banerjee ,West Bengal Legislative Election ,
× RELATED 116 கப்பல்களை தாக்கிய உக்ரைன்.!! ஹோர்முஸ்...