வலங்கைமான், ஜூலை 15: கார்விபத்தில் புரோகிதர் பலியானார். கோவை போலீஸ் ஸ்டேஷன்ரோடு பகுதியில் வசிப்பவர் சுவாமிநாதன் (83). புரோகிதர். இவர் நவக்கிரக கோயில்களுக்கு காரில் கோயம்புத்தூரில் இருந்து தஞ்சாவூர் புறவழிச் சாலை வழியாக சென்றனர். காரை கோவை இடையர்பாளையம் பாலசுப்பிரமணியன் (36) என்பவர் ஓட்டினார். அதிகாலை வலங்கைமான் அருகே மதகரம் பகுதியில் கார் மதகு கட்டை ஒன்றில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
