×

தூத்துக்குடியில் நாளை மறுதினம்: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

தூத்துக்குடி, ஜூலை 15: தூத்துக்குடியில் நாளை மறுதினம் (17ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் வேலையளிக்கும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம். 10ம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, பிஇ, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்போர் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் வர வேண்டும். வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து ஆகாது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in, http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Tuticorin ,District Collector ,Vishu Mahajan ,Tuthukudi District Employment ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்