×

பாலக்காடு அரசு மருத்துவமனையில் புதிய கட்டுமான பணிகள்

பாலக்காடு, ஜூலை 15: பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை கேரள மாநில சுகாதாரம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கே.முரளிதரன் நேற்று நேரில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், மாவட்ட அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைய நிதியுதவிகளுடன் எம்.பி., எம்.எல்.ஏ., வினர் நிதியுதவிகள் இணைத்து மருத்துவமனையில் மேம்பாட்டிற்காக செலவீடு செய்யப்படவுள்ளது. தனியார் மருத்துவமனைகளை விட திறன்பட அரசு மருத்துவமனைகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன என்றார்.

 

Tags : Palakkad Government Hospital ,Palakkad ,Kerala State Health and Charitable Trusts ,Minister ,K. Muralitharan ,Palakkad District Government Hospital ,district government hospital… ,
× RELATED பரம்பிக்குளம் வனப்பகுதியில்...