×

நோயின் தாக்கத்தால் முதியவர் தற்கொலை

நீடாமங்கலம், ஜூலை 14: கொரடாச்சேரி அருகே நோயின் தாக்கம் தாங்க முடியாமல் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். கொரடாச்சேரி அருகே உள்ள கீழ எருக்காட்டூர் உப்புக்கோட்டை தெருவில் வசித்து வருபவர் பஞ்சாச்சரம். இவரது மகன் கமலக்கண்ணன் (51). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு மஞ்சள்காமலை ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.சம்பவத்தன்று மீண்டும் மது குடித்தவுடன் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கமலக்கண்ணன் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். மயங்கிய நிலையில் இருந்தவரை உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக கமலக்கண்ணன் மனைவி வனிதா கொரடாச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Needamangalam ,Koratacherry ,Panchacharam ,Keeza Erukkattur Uppukottai Street ,Kamalakannan ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்