×

கரைம் மளிகை கடையில் ரூ.15ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவாரூர், ஜூலை 13: திருவாரூரில் மளிகை கடை ஒன்றிலிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த நிலையில் கடை உரிமையாளரை கைது செய்த போலீசார். திருவாரூர் துர்காலயா சாலையில் வசித்து வருபவர் சண்முகம் மகன் தட்சிணாமூர்த்தி (27). இவர் அதே பகுதியில் மளிகை கடைஒன்றினை நடத்தி வரும் நிலையில் அந்த மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று அந்த கடையினை சோதனை செய்தனர். அப்போது ரூ.15 ஆயிரம் மதிப்புடைய குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்ததன் பேரில் அதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கடை உரிமையாளர் தட்சிணாமூர்த்தியையும் கைது செய்தனர்.

Tags : Karaim ,Thiruvarur ,Shanmugam ,Magan Dakshinamoorthy ,Durgalaya Road, Thiruvarur ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்