×

முத்துப்பேட்டை கொய்யா தோப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, ஜூலை 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-1 சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர், அதில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியில் அடிப்படை வசதிகளாக தார் சாலை வசதி, தெரு விளக்குகள், குடிநீர் குழாய் வசதி என்று அனைத்தும் படுமோசமான நிலையில் உள்ளது. அதே போன்று குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக இப்பகுதிக்கு செய்து தர வேண்டும் என இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Muthupettai Koiya Thoppu ,Muthupettai ,Tamil Nadu Thowheed Jamaat Branch-1 ,Muthupettai, Tiruvarur district ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்