×

சொர்ணவாரியில் பயிரிட்ட 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகியது

 

ஆரணி, ஜூலை 10: ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் புயல், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பெருத்த நஷ்டம் ஏற்பாட்டலும், விவசாயம் செய்வதை விடாமல் விவசாயிகள் தொடர்ந்து உழவு மற்றும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், துரிஞ்சாபுரம் என மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சொர்ணவாரி பட்டத்தில் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, உரம் இடு பொருட்கள், உழவுப் பணிகளுக்கு கூலி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்த ஆண்டு சொர்ணவாரி பட்டத்தில் ஏரி மற்றும் கிணறு பாசனத்தை நம்பி நெல் பயிர்களான கோ 51, மகேந்திரா, ஸ்ரீ, குண்டு உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு மற்றும் இயந்திர நடவுகள் செய்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

Tags : Sornavari ,Arani ,
× RELATED திருவண்ணாமலை புதிய பேருந்து...