×

நெல்லையில் ரூ.15,037 கோடி முதலீடு, 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலை அமைக்க முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (09.07.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது.

இந்நிலையில், இன்று (09.07.2026) திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

Tags : MoU ,Chennai ,Chief Minister ,Vijay ,Battery Energy Storage Systems ,BESS ,Gangaikondan Industrial Unit ,Vikram Solar ,
× RELATED இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்