×

மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ரெகுநாதபுரம் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்

 

வலங்கைமான், ஜூலை 9: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ரெகுநாதபுரம் சாலையில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்வாக உள்ள மின்கம்பத்தினை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லும் சாலையில் சந்திரசேகரபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் மின்கம்பம் ஒன்று சாலையில் சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது முன் பட்ட குருவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்கும்டிராக்டரில் வைக்கோல் ஏற்றி வருவதற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மின் கம்பம் சாய்வாக உள்ளது.பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்வாக உள்ள மின்கம்பத்தினை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Regunathapuram road ,Valangaiman ,Adichamangalam Regunathapuram Road ,Thiruvarur District ,ValangaimanChandrasekharapuram ,Adichamangalam Uratchi ,Regunathapuram ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்