×

நீடாமங்கலம் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் திடீர்ஆய்வு: வேளாண் இயக்குனர் அதிகாரிகளுக்கு அறிவுரை

 

நீடாமங்கலம், ஜூலை 9: நீடாமங்கலத்தில் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் கீழ் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் இயங்கி வருகிறது.
இந்த உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தை வேளாண்மை இயக்குனர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வேளாண்மை இயக்குனர் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும் உற்பத்தி செய்யப்பட்ட உயிர் உரங்கள் உடனடியாக வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் வழங்க அறிவுரை வழங்கினார்.

Tags : Needamangalam ,Bio-Fertilizer Production Center ,Agriculture and Farmers Welfare Department ,Tiruvarur district ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்