அய்யர்மலை அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்து சேவை வேண்டும்: எம்எல்ஏவிடம் மாணவர்கள் வேண்டுகோள்

 

குளித்தலை ஜூலை 9: அய்யர்மலை அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டுகோள் எம்எல்ஏவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி அய்யர்மலை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பொழுது 150 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட கல்லூரி தற்பொழுது 2000 மாணவர்கள் இளங்கலை முதுகலை கல்வி பயிலும் நிலைக்கு உயர்ந்து உள்ளது. இதனால் இப்பகுதி சுற்று வட்டார கிராமப்புற நகர்ப்புற மாணவ,  மாணவிகள் பட்டம் பெற்று பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அளவிற்கு தங்களை உயர்த்திக் கொண்டனர். மேலும் இக்கல்லூரி பல்கலைக்கழக அளவில் பல்வேறு சாதனைகள் மாணவ, மாணவிகள் படைத்துள்ளனர்.

 

 

 

Related Stories: