கரூர் மாவட்டத்தில் கபடி சாம்பியன்ஷிப் போட்டி

 

கரூர், ஜூன் 30: கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய கபடி கழகம் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட அமைச்சூர் கபடிக்கழகம் சார்பில் வெயியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அமைச்சூர் கபடி பெடரேஷன் ஆப் இந்தியா (ஏகேஎப்ஐ) நீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிமுறைகளின் அடிப்படையில் நமது மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடத்த வேண்டியது உள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கபடி அணிகள் உள்ள விவரங்கள் வரும் 1/7/26 முதல் 5/7/26 வரை உள்ள நாட்களுக்குள் தங்கள் அணியினை முன்பதிவு செய்து கொண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பதிவு செய்யாத அணிகள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது. சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் அணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கரூர் மாவட்ட கபடி கழக பொதுக்குழு உறுப்பினராவார் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு போட்டியிடவும், வாக்களிக்கவும் இவர்கள் தகுதி உடையவர்கள். அணியினை பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் கபடி நடுவர்கள் விஜயகுமார், ரகுபதி காமராஜ், ஜெமினி, ராஜ்குமார ஆகியோர் செயல்படுகின்றனர். இத்தகவலை சங்க செயலாளர் நல்சேதுராமன் தெரிவித்துள்ளார்.எனவே ஒவ்வொரு அணியும் தவறாமல் பதிவுசெய்து சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Related Stories: