×

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த முதல்வர் விஜய், நேராக பிரசவ அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் சென்றார். தாய்மார்களை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சினார். சில நாட்களுக்கு முன்பு, எழும்பூர் மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இல்லை என்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதை தொடர்ந்தே, முதல்வர் ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. ஆய்வின் போது, அமைச்சர் அருண்ராஜ், சுகாதாரத்துறை செயலாளர்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,Vijay ,Children's Hospital ,Egmore, Chennai ,Chennai ,Egmore Children's Hospital ,
× RELATED ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் இடையே...