×

இங்கிலாந்துடன் இன்று 3வது டி20 பதிலடி கொடுக்குமா இந்தியா?

நாட்டிங்காம்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று இரவு 10.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி நாட்டிங்காமில் இன்று இரவு நடக்கிறது. நாட்டிங்காமில் அறிமுகமான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பதிலடி கொடுக்க ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி வரிந்துகட்டும் நிலையில், 2-0 என முன்னிலையை அதிகரிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : India ,England ,T20I ,Nottingham ,Trent Bridge ,Indian ,Chester-le-Street… ,
× RELATED உலகக் கோப்பை கனவு முடிவு: கண்ணீருடன் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!