அறிமுகமானார் வைபவ்: அபி 43, இஷான் 49, ஷ்ரேயாஸ் 37 இந்தியா 7 விக்கெட்டுக்கு 190

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான 2வது டி20 போட்டியில் இந்தியா 20 ஓவரில்7விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. மான்செஸ்டர், ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய சீனியர் அணியில் வைபவ் சூரியவன்ஷி 15 வயது, 99 நாளில் அறிமுகமாகி சாதனை படைத்தார். முன்னதாக சச்சின் 16 வயது, 205 நாளில் அறிமுகமாகி இருந்தார்.

அபிஷேக், வன்ஷி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். வைபவ் 14 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட, அபிஷேக் 43 ரன் (24 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் 49 ரன் (40 பந்து, 6 பவுண்டரி), ஷ்ரேயாஸ் 37 (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 24 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச… இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3, ஜாக்ஸ், ஆர்ச்சர், டாவ்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

Related Stories: