சென்னை: ஆளுநரை சந்தித்தப் பின் திமுக நிர்வாகிகள் செய்தியாளர் சந்தித்தனர். குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அதிகாரம் மிக்கவர்களாக செயல்படுகின்றனர். அதிகாரத்தில் தனி நபர்கள் தலையிட்டு வருவதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். திமுக எம்.எல்.ஏ.விடம் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
