திருவள்ளூர்: இறால் ஆலையில் அமோனியா வாயு கசிந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். ஆலையில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை அகற்றி டேங்கர் லாரிக்கு மாற்றம் செய்யப்பட்டு 60% பணிகள் நிறைவடைந்துள்ளது. பைப்புகளில் உள்ள அமோனியாவை அகற்றும் பணி நாளை காலை நடைபெறும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தகவல் தெரிவித்துள்ளார்.
