×

முன்னாள் மனைவி, கணவர் மூலம் பிறந்த குழந்தைகள் முன்னிலையில் அமீர் கானுக்கு நாளை மறுநாள் 3வது திருமணம்

மும்பை: நடிகர் அமீர் கான் தனது நீண்ட நாள் காதலி கவுரி ஸ்ப்ராட்டை நாளை மறுநாள் எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளார். பாலிவுட் நடிகர் அமீர் கான் (60), ரீனா தத்தா என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் கான் என்ற நடிகர் மகனும், இரா கான் என்ற தொழில்முனைவோர் மகளும் உள்ளனர். இதையடுத்து, திரைப்பட இயக்குனர் கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்த இவருக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னணி கூந்தல் பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது அமீர் கான் புரொடஷன்ஸ் நிறுவனத்தில் உதவி செய்து வரும் கவுரி ஸ்ப்ராட் என்பவரை, நடிகர் அமீர் கானின் உறவினர் நுஷாத் கான் மூலமாக பெங்களூருவில் சந்தித்தார். சுமார் 1 ஆண்டு காதலுக்குப் பிறகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60வது பிறந்தநாளுக்கு முன்பாக கவுரியை ஊடகங்களுக்கு தனது துணையாக அறிமுகப்படுத்திய அமீர் கான், கடந்த மாதம் தங்களது திருமண தேதியை உறுதி செய்தார்.

மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் நாளை மறுநாள் (ஜூலை 5) எளிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. எந்தவித பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் இன்றி, மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த 3வது திருமணம் மிக எளிமையாக பதிவுத் திருமணமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அமீர் கானின் முதல் திருமண குழந்தைகள் மற்றும் கிரண் ராவ் மூலமாக பிறந்த மகன் ஆசாத், கவுரியின் முதல் திருமணத்தில் பிறந்த மகன் என 4 குழந்தைகளும் பங்கேற்க உள்ளனர். தனது திருமணம் குறித்துப் பேசிய அமீர் கான், ’இந்த வயதில் திருமணம் செய்து கொள்வது எனக்குப் பொருத்தமாக இருக்காது, ஆனால் நான் தற்போது கவுரியுடன் மிகவும் மனநிறைவுடன் வாழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Aamir Khan ,Mumbai ,Gauri Spratt ,Bollywood ,Reena Dutta ,Junaid… ,
× RELATED போதைப் பொருள் கடத்தல் வழக்கில்...