திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,304 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.51 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியது. இதனால் பக்தர்கள் கிருஷ்ணதேஜா விடுதி கட்டிடம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 12 மணி நேரம் ஆகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
