- தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம்
- திருச்சி
- தஞ்சாவூர்
- வள்ளியம்மை நாதர்
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
- தீபம்புரம்
- அம்மாபேட்டை
- நாகை,
- மதியழகன்…
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வள்ளியம்மை நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை புதுப்பிக்கும் பணிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டது. இந்த பணியை நாகையை சேர்ந்த ஒப்பந்ததாரர் மதியழகன் எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கோயில் திருப்பணி நிதியை ஒதுக்குமாறு தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம்(47) ஒப்பந்ததாரர் மதியழகன் கேட்டார். அப்போது கோயில் திருப்பணி நிதியை ஒதுக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஜோதிலட்சுமி கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை புரோக்கரான கிரிஜா(53) மூலமாக கொடுக்குமாறு கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் மதியழகன், தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். பின்னர் போலீசார் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்துடன் தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு நேற்று மாலை மதியழகன் சென்று அங்கிருந்த கிரிஜா மூலம் இணை ஆணையரிடம் லஞ்ச பணத்தை மதியழகன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இரவு 11 மணி வரை அறநிலையத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்தது. இன்று காலை கும்பகோணம் கோர்ட்டில் ேஜாதிலட்சுமி, கிரிஜா ஆகியோரை ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
