×

இந்தியா-ஏ அணியுடன் 2வது டெஸ்ட் இலங்கை-ஏ 5 விக்கெட்டுக்கு 288

காலே: இந்தியா-ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), இலங்கை-ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில்,டாஸ் வென்ற இந்தியா-ஏ அணி கேப்டன் துருவ் ஜுரெல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இலங்கை-ஏ அணி வீரர்கள் பவந்தா வீரசிங்கே 39, சோஹன் டி லிவெரா 28, நுவனிடு பெர்னாண்டோ 44, அஷென் பண்டாரா 34, அஞ்சலா பண்டாரா 42 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை-ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்துள்ளது. கேப்டன் சஹான் அராச்சிகே 83 ரன் (148 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), சமிகா குணசேகரா 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா-ஏ பந்துவீச்சில் சரன்ஷ் ஜெயின், யஷ் தாகூர் தலா 2 விக்கெட், குர்னூர் பிரார் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Sri Lanka ,India A. Galle ,India A ,Galle International Stadium ,India ,Dhruv Jurel ,
× RELATED ரன்கள் குவித்த இந்தியா… ஆட்டத்தை...