×

சில்லி பாயின்ட்…

* மொராக்கோ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. பெனால்டி வாய்ப்புகளை தவறவிட்ட நெதர்லாந்து வீரர்கள் ஜஸ்டின் குளுய்வெர்ட், குயின்டன் டிம்பர், கிரிசென்சியோ சம்மர்வில்லி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளானதுடன் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்க்கப்பட்டது கால்பந்து விளையாட்டுக்கே பெருத்த அவமானம் என அந்நாட்டு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் முதல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்; ஆஸ்திரேலியா 13 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன் (பெத் மூனி 61*, ஆஷ்லே கார்ட்னர் 35*).

* சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி இஷான் கிஷன் முதலிடம் பிடித்துள்ளார்.

* முதலாவது ஐரோப்பிய டி20 பிரிமியர் லீக் தொடரில் களமிறங்க உள்ள டப்ளின் கார்டியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் ஆலோசகராக இந்திய சுழற்பந்து நட்சத்திரம் ஆர்.அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Netherlands ,Morocco ,Justin Kluivert ,Quinton Timbers ,Crescencio Summerville ,
× RELATED இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20...