சென்னை: குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின் தமிழ்நாட்டில் புதிய மாடலாக வந்திருப்பதாக கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இன்று இணைகின்றனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி; வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
