தருமபுரி: கோட்டை கோவில் அருகே மனைவி மற்றும் 14 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து மகள் சாத்விகாவை அழைத்துவந்த சந்தோஷ் (45), மனைவி சரண்யா (36) மற்றும் மகளை கொலை செய்துவிட்டு லாரியின் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
