கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் பழுதடைந்த நிழற்குடை

 

கரூர், ஜூன் 29: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கரூரில் இருந்து வாங்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியினர் பயன்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரப்பட்டது.

கடந்த சில ஆண்டுகள் பயன்பட்ட நிலையில் தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் நிழற்குடை மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி சீரமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த நிழற்குடையை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கி்னறனர்.

 

Related Stories: