சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூரில் ரயில்களில் அடிபட்டு மூவர் உயிரிழந்துள்ளனர். கிண்டி அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 35 வயதான ஆண் உயிரிழந்தார்; இதேபோல திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, குரோம்பேட்டை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சடலங்களைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், அவர்களின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
