3 நாட்கள் தொடர் விடுமுறை; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 24 மணி நேரமாகும் என தெரிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 62,925 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,297 பக்தர்கள் தலைமுடி காணிக்ைக செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.3.77 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.23 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.40 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் வெளியே பாட்ட கங்கம்மா கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

Related Stories: