2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஈகுவடார் சாதனை வெற்றி

நியூயார்க்: 48 அணிகள் பங்கேற்றுள்ள 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் இ பிரிவில் பலம் வாய்ந்த ஜெர்மனி-ஈகுவடார் அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் லெராய் சேன் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 9வது நிமிடத்தில் ஈகுவடாரின் நில்சன் அன்குலோ அபாரமான கோல் அடித்து 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

2வது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில், கார்னர் கிக் மூலம் கிடைத்த பந்தை ஈகுவடார் நட்சத்திர வீரர் கொன்சலோ பிளாடா மின்னல் வேகத்தில் கோலாக மாற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் வெற்றிபெற்றது. இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் குரூப் சுற்றில் ஜெர்மனியை வீழ்த்திய முதல் தென் அமெரிக்க அணி என்ற பெருமையை ஈகுவடார் பெற்றது.

இ பிரிவில் தலா 2 வெற்றிகளுடன் முறையே முதல் 2 இடம் பிடித்த ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் ரவுன்ட் ஆப் 32 சுற்றுக்குள் நுழைந்தது. ஈகுவடார் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்து, சிறந்த 3வது இடத்தைப் பெற்ற அணிகளின் வரிசையில் நாக்-அவுட் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

Related Stories: