×

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாததால் மாணவிகள் அவதி

*ஓடிச்சென்று ஏறும் அவலம்

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லுரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழியாக இயக்கப்படுகிற அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் அங்கும், இங்குமாக பஸ்களை நிறுத்தி வருகிறார்கள்.

இதனால் பஸ்களில் இடம் பிடிக்கவும், ஏறுவதற்காகவும் மாணவ, மாணவிகள் சாலையில் அங்கும், இங்குமாக ஓடுகின்றனர். முண்டியடித்தபடி பஸ்களில் ஏறுகின்றனர். இதன் காரணமாக பல்லடம் சாலையில் வருகிற வாகன ஓட்டிகளும் மாணவ, மாணவிகள் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஸ்களை உரிய நிறுத்தத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruppur ,Tiruppur Collectorate ,
× RELATED அமோனியா வாயு கசிவால் பலியானோர்...