×

அமராவதிபாளையம் மாட்டுசந்தைக்கு 690 மாடுகள் வரத்து

 

திருப்பூர், ஜூன் 23: திருப்பூர் தாராபுரம் சாலை கோவில் வழி அருகே உள்ள அமராவதிபாளையம் சந்தைக்கு நேற்று சுமார் 690 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. நேற்றைய சந்தையின் நிலவரப்படி, கன்றுக்குட்டிகள் தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும், காளைகள் ரூ.25,000 முதல் ரூ.28,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல், எருமைகள் ரூ.27,000 முதல் ரூ.31,000 வரையிலும், மாடுகள் ரூ.30,000 முதல் ரூ.31,000 வரையிலும் விற்பனையானது. நேற்றைய தினம் சுமார் ரூ.90 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை விற்பனை நடைபெற்றிருக்கலாம் எனவும், கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாக வந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Amaravathipalayam ,Tiruppur ,Amaravathipalayam market ,Tiruppur Tarapuram Road Temple Road ,
× RELATED கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு