×

பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

பல்லடம், ஜூன் 22: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்லடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
பல்லடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Palladam ,Tamil Nadu Farmers Association ,Anaimalaiyaru-Nallaru ,
× RELATED கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு