×

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு

 

குளித்தலை, ஜூன் 19: ஆஞ்சநேயர் கோயில் குபாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் மர்ம நபர் 4 பவுன் செயினை பறித்துச் சென்றார். கரூர் மாவட்டம் குளித்தலை டவுன்ஹால் தெருவில் உள்ளது நீலமேக பெருமாள் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். சமீபத்தில் இக்கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிரே இருந்த பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலை அப்புறப்படுத்திவிட்டு புதிய கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான திருப்பணிகள் நடைபெற்றது.இநிநிலையில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது குளித்தலை சின்னாண்டார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி காசாளர் மருதை என்பவரது மனைவி சாந்தி (85). கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் மர்ம நபர்களால் திருடிச்சென்றனர்.
இந்நிலையில் அன்னதானம் வாங்கிய பிறகு கழுத்தில் பார்த்த பொழுது திருடப்பட்டது தெரியவந்ததும் மூதாட்டி கதறி அழுதார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அங்கு இருந்தவர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர் இதுகுறித்து குளித்தலை போலீசார் மூதாட்டி இடம் செயின் பறித்த மர்மநபரை தேடுகின்றனர்.

Tags : Anjaneyar temple ,Kulithalai ,Anjaneyar ,Neelameka Perumal Temple ,Town Hall Street ,Kulithalai, Karur district ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி நிலக்கடலையை தாக்கும் பூச்சிகள்