சென்னை : தரமில்லாத உணவு விநியோத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.30,000 இழப்பீடுதர உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.30,000 இழப்பீடு வழங்க சொமோட்டோ மற்றும் உணவகத்துக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெகபிரபு என்பவர் வேளச்சேரி அர்ஜூன் ஆந்திரா மெஸ்ஸில் சொமோட்டோவில் அசைவு உணவு ஆர்டர் செய்தார். உணவு உட்கொண்ட ஜெகபிரபுக்கு மூச்சுத்திணறல், தலை சுற்றல், நெஞ்சடைப்பு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. 2 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ஜெகபிரபு, உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
The post ரூ.30,000 இழப்பீடு வழங்க சொமோட்டோ, ஹோட்டலுக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு!! appeared first on Dinakaran.
