
மதுரை: இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அஜித்குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அனைத்து சாட்சியங்களையும் முறையாக சேகரித்ததாக தெரியவில்லை. சட்டவிரோத மரணத்துக்கு காரணமான உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளைஞர் மரண வழக்கில் அரசு நேர்மையாக உள்ளது; யாருக்கும் சாதகமாக இல்லை என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.
