×

காதலித்து கைவிட்டதால் இளம்பெண் தற்கொலை வாலிபர் சரமாரிகுத்தி கொலை: பழிதீர்த்த தந்தை, மகனுக்கு வலை

பெ.நா.பாளையம்: காதலன் கைவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரது தந்தையும், அண்ணனும் சேர்ந்து அந்த வாலிபரை சரமாரி குத்தி கொலை செய்தனர். கோவை அருகே துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது தாய் ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அய்யன் கொல்லகொண்டான் கிராமத்திற்கு தமிழ்ச்செல்வன் அடிக்கடி சென்று வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தியை காதலித்துள்ளார்.

அவருக்கு தெரியாமல் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மற்றொரு பெண்ணையும் காதலித்துள்ளார். இது தெரிந்து தன்னை திருமணம் செய்யும்படி ஆனந்தி கூறியுளளார். அதை அவர் ஏற்காததால் மனமுடைந்த ஆனந்தி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன்தான் காரணம் என்று ஆனந்தியின் தந்தை மலைக்கனி (47), அண்ணன் ராஜாராம் (25) ஆகியோர் முடிவு செய்து அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று இருவரும் டூவீலரில் கோவைக்கு வந்தனர். துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தமிழ்ச்செல்வனை போன் செய்து வெளியே வரவழைத்தனர். பின்னர் அருகில் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில், ரத்தவெள்ளத்தில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். இதையடுத்து இருவரும் தப்பி சென்றனர். இதுகுறித்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

The post காதலித்து கைவிட்டதால் இளம்பெண் தற்கொலை வாலிபர் சரமாரிகுத்தி கொலை: பழிதீர்த்த தந்தை, மகனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tamil ,Selwan ,Nilgiri District Bhandalur ,Dudyalur ,Goa ,
× RELATED ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க...