×

கீழடியில் மூடியுடன் பானை கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கணேசன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் நடந்த அகழாய்வில் 3வது குழியில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரத்தில் 5  லிட்டர் கொள்ளளவு கொண்ட இப்பானையை கலைநயம் மிக்க மூடியை கொண்டு மூடி வைத்துள்ளனர்.  

இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையிலும் உள்ளே எந்த பொருட்களும் இல்லாமல் இருந்தன. ஆனால் இப்பானை கச்சிதமாக மூடப்பட்டுள்ளதால் உள்ளே பொருட்கள் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. பானையின்  உள்ளே இருக்கும் பொருட்கள் தொல்லியல் துறை உயர் வல்லுனர்கள் வந்த பின் எடுக்கப்படும் என தெரிகிறது. மணலூரில் ஜானகி அம்மாள் என்பவரது நிலத்தில் 2  குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அகரத்தில் 2 குழிகள் மட்டும்  தோண்டப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது.



Tags : Discover the pot with the lid on the bottom
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...