×

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. 128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் சுமார் 8 மணி நேர விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வாக்கு சீட்டின் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 454 பேர் ஆதரவும், 2 எம்பி-க்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். வாக்குச்சீட்டின் அடிப்படையிலான வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்று மசோதா நிறைவேறியது. இந்நிலையில், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் நடைபெற்ற விவாததை போன்றே மாநிலங்களவையிலும் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது இன்று விவாதம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Delhi ,Dinakaran ,
× RELATED வௌிநாடுகளுக்கு போகும் மோடிக்கு...